/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குழாயில் உடைப்பு வீணாகிறது குடிநீர்
/
காவிரி குழாயில் உடைப்பு வீணாகிறது குடிநீர்
ADDED : மார் 30, 2024 05:53 AM

கமுதி, : கமுதி--முதுகுளத்துார் சாலை பாக்குவெட்டி அருகே காவிரி மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
கமுதி--முதுகுளத்துார் சாலையோரங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு பேரையூர், கருங்குளம் பாக்குவெட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
பாக்குவெட்டி பஸ் ஸ்டாப் அருகே சாலையோரத்தில் காவிரி மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. குடிநீர் எந்தவொரு பயன்பாடின்றி விவசாய நிலங்களில் பாய்கிறது.
இதனால் பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முதுகுளத்துார்- -கமுதி சாலை பாக்குவெட்டி அருகே காவிரி மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாவது தொடர் கதையாக உள்ளது.
எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து குழாய்களை மராமத்து பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

