ADDED : ஆக 03, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் அலுவலகம் மற்றும் வேல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. அரசு அலுவலர்கள் உலகத் தாய்ப்பால் வார விழா உறுதிமொழி எடுத்தனர். –––
