/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் மீன் இறக்கும் பாலத்தில் செங்கல் கட்டுமானம்
/
ராமேஸ்வரத்தில் மீன் இறக்கும் பாலத்தில் செங்கல் கட்டுமானம்
ராமேஸ்வரத்தில் மீன் இறக்கும் பாலத்தில் செங்கல் கட்டுமானம்
ராமேஸ்வரத்தில் மீன் இறக்கும் பாலத்தில் செங்கல் கட்டுமானம்
ADDED : மே 29, 2024 05:48 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் படகு நிறுத்தும் பாலம் கட்டுமானப் பணியில் தரமற்ற செங்கல் பயன்படுத்துவதால் உப்புக்காற்றில் சேதமடைய வாய்ப்புள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் துறைமுகம் கடற்கரையில் நபார்டு வங்கி நிதி உதவியில் ரூ.22 கோடியில் படகுகள் நிறுத்த பாலம் கட்டுமானப் பணி ஓராண்டாக நடக்கிறது. இப்பாலம் 200 மீ., நீளம், 150 மீ., அகலத்தில் ' டி ' வடிவில் கட்டுகின்றனர்.
இந்தியாவிலே உப்புக் காற்றில் அதிகம் துருப்பிடிக்கும் பகுதியாக ராமேஸ்வரம் தீவு உள்ளதால் இப்பாலம் சேதமடையாத வகையில் சிமென்ட், ஜல்லி உள்ளிட்ட ரசாயனம் கலந்த கான்கிரீட் கலவையில் கட்டுமானம் நடக்கிறது.
இந்நிலையில் துாண்களுக்கும் மேல் பக்கவாட்டில் செங்கல் வைத்து கட்டி உள்ளனர். இது தரமற்ற செங்கலாக உள்ளதால் கீழே விழுந்தால் உடைந்து விடும் தரத்தில் உள்ளது. இச்சூழலில் உப்புக் காற்று மற்றும் ராட்சத அலை வீசும் இப்பகுதியில் இந்த செங்கல் தாக்குப் பிடிக்காமல் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
எனவே பாலத்தில் தரமான பொருள்களை கொண்டு கட்டமைக்க மீன்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.