
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி, : -கடலாடி அருகே வனப்பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் மற்றும் கொண்டன அய்யனார் கோயிலில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
பூஞ்சிட்டு, நடுமாடு, சின்ன மாடு என மூன்று பிரிவுகளாக நடந்தது. ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 37 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. 5 கி.மீ., 6 மற்றும் 7 கி.மீ., தொலைவிற்கு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நிர்ணயிக்கப்பட்டது. சாயல்குடி - முதுகுளத்துார் சாலையில் நடந்தது. முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசும், வண்டி ஓட்டிய சாரதிக்கு பரிசு வழங்கப்பட்டது.