ADDED : ஜூன் 27, 2024 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா ஜூன் 18 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருவிளக்கு பூஜை, பூக்குழி இறங்குதல், காவடி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று காலை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, சிறிய மாடு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாட்டு வண்டி ஓட்டுநர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சின்னக்கீரமங்கலம், பெரிய கீரமங்கலம், வத்தாபட்டி, திருவள்ளுவர் நகர் போன்ற பல பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.

