/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடியில் மாலை 6:00 மணிக்கு மேல் பஸ் ஸ்டாண்டிற்குள் வராத பஸ்கள்
/
கடலாடியில் மாலை 6:00 மணிக்கு மேல் பஸ் ஸ்டாண்டிற்குள் வராத பஸ்கள்
கடலாடியில் மாலை 6:00 மணிக்கு மேல் பஸ் ஸ்டாண்டிற்குள் வராத பஸ்கள்
கடலாடியில் மாலை 6:00 மணிக்கு மேல் பஸ் ஸ்டாண்டிற்குள் வராத பஸ்கள்
ADDED : ஜூன் 30, 2024 04:49 AM
கடலாடி : அரசு மற்றும் தனியார் பஸ்கள் கடலாடி பஸ் ஸ்டாண்டிற்குள் இரவு நேரங்களில் வராமல் மாலை 6:00 மணி முதல் இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்டிற்கு சற்று தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் இறக்கி விடும் போக்கு தொடர்கிறது. கடலாடி நகர் வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் முனியசாமி ஆகியோர் கூறியதாவது:
கடலாடி நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பயணிகளை இறக்கி விடும் போக்கு தொடர்கிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட பஸ் டெப்போ மேலாளரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
முதியவர்கள், சிறு குழந்தைகள் பஸ் ஸ்டாண்டிற்கு வருவதற்கு நடந்து செல்லும் போக்கு தொடர்கிறது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி கடலாடி பஸ் ஸ்டாண்டிற்குள் எல்லா நேரமும் பஸ்கள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.