/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதர்மண்டிய கால்நடை மருத்துவமனை வளாகம்
/
புதர்மண்டிய கால்நடை மருத்துவமனை வளாகம்
ADDED : பிப் 26, 2025 07:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே கால்நடை மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு பல்வேறு கிராமங்களில் இருந்து கால்நடைகளுக்கு சிகிச்சை பெற மக்கள் வருகின்றனர்.
பராமரிப்பு இல்லாமல் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே சீமை கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. இதனால் விஷப்பூச்சிகள் தங்கும் கூடாரமாக மாறும் அவலநிலை உள்ளது. கால்நடைகளை அழைத்து வரும் மக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே மருத்துவமனை வளாகத்தில் வளர்ந்துள்ள சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.