/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலைப்பயிற்சி முகாமில் சேர்க்கைக்கு அழைப்பு
/
கலைப்பயிற்சி முகாமில் சேர்க்கைக்கு அழைப்பு
ADDED : ஜூன் 14, 2024 10:25 PM
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் நடக்கும் கலைப்பயிற்சி முகாமில் மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மண்டல கலைப்பண்பாட்டுத்துறை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசு கலைபண்பாட்டுத்துறை சார்பில் பள்ளி மாணவர்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளை பயனுள்ளதாக அமைத்திடவும், கலைகளை கற்றுக்கொள்ளவும் ராமநாதபுரம் வெளிப்பட்டினம் டி.டி.விநாயகர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் கலைப்பண்பாட்டுத்துறை, ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் ஜூன் 24 முதல் பயிற்சி வகுப்புகள் துவக்கப்படவுள்ளது.
பயிற்சி வகுப்பில் 6 முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பாட்டு (குரலிசை), பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம், ஆகியவைகளில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4:00 முதல் 6:00 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும் பயிற்சியளிக்கப்படுகிறது.
ஆண்டு பயிற்சி கட்டணம் 200 ரூபாய். காலாண்டு விடுமுறைக்கு மாநில அளவிலான கைவினை, கலை பயிற்சி முகாமிற்கும், அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாநில அளவிலான மாரிக்கால கலைப்பயிற்சி முகாமிற்கும், இறுதியில் மாநில அளவிலான கோடை கால பயிற்சி முகாமிற்கும் மாணவர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.
தேசிய அளவில் புது டெல்லியில் நடைபெறும் தேசிய குழந்தைகள் தின விழா, தேசிய இளம் சிறார்களுக்கான சுற்றுச்சூழல் மாநாடு போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறலாம்.
மாணவர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம். விவரங்களுக்கு ஜவகர் சிறுவர் மன்ற மாவட்ட திட்ட அலுவலர் லோக சுப்பிரமணியனை 98425 67308 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.