/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்கில் தீர்வு காண அழைப்பு

ADDED : ஜூன் 27, 2024 04:21 AM
ராமநாதபுரம் |: -உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம்நடத்தப்பட்டு வழக்குகளில் தீர்வு காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசம் மூலம் தீர்வு காண ஜூலை 29 முதல் ஆக.8 வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்த உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் இரு தரப்பினரும் பங்கேற்று தங்களது வழக்குகளை சமரசமாக முடிக்க நேரிலோ அல்லது இணையதள மூலமாக தொடர்பு கொண்டு சமரச முறையில் குறைந்த செலவில் தீர்வு காணலாம்.
இதில் நீதிமன்ற முத்திரை கட்டணம் முழுவதுமாக திரும்ப பெறுதல், இறுதி மற்றும் செயல்படுத்துவதற்கான உத்தரவுகள் இதன் சிறப்பு அம்சமாகும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது வழக்குகள் ஏதேனும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் அந்த வழக்குகளை சமரச முறையில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணலாம். வழக்கு விபரங்களை நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சட்ட உதவி மையத்தில் தெரிவிக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவினரை 04567 -230444 என்ற தொலைபேசி மூலமும், dlsaramanathapuram@gmail என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவி எண் 044- 2534 2441 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.