/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேட்பாளர்கள் செலவு விபரங்களை தினசரி தொகுதி பார்வையாளரிடம் வழங்க வேண்டும் ஏப்.5, 10, 17 ல் ஆய்வுக் கூட்டம்

ADDED : ஏப் 03, 2024 06:55 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினசரி செலவின அறிக்கையை சட்ட சபைக்கான உதவி செலவின பார்வையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
மாவட்டத் தேர்தல் செலவின பார்வையாளர் ஹீரா ராம் சவுத்ரி தலைமையில் வேட்பாளர்கள் செலவினங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஏப்.5, 10, 17 ஆகிய நாட்களில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் தேர்தல் செலவின கணக்குகள் பராமரிப்புப் பதிவேடுகள், செலவின வவுச்சர்கள், பட்டியல்கள், வங்கிக் கணக்கு விபரங்கள், காசோலைப் புத்தகம் ஆகியவற்றை மேற்கண்ட நாட்களில் தேர்தல் செலவின கமிட்டியிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
இதுபோக தினசரி செலவின அறிக்கையை சட்ட சபைக்குரிய உதவி செலவின பார்வையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆய்வுக்கு சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் விபரங்கள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.