/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கார்பைடு வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்பு துறை
/
கார்பைடு வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்பு துறை
கார்பைடு வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்பு துறை
கார்பைடு வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்பு துறை
ADDED : மே 03, 2024 05:10 AM
சாயல்குடி: கோடை காலத்தில் மாம்பழம் வரத்து அதிகரிக்கும் நிலையில் கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைப்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலை உள்ளது.
இந்த சீசனில் மாம்பழம் விளைச்சல் உள்ள நிலையில் ரசாயனங்களை பயன்படுத்தி விரைவில் பழங்களை பழுக்க வைத்து விற்பனையை அதிகரிக்கச் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. மாம்பழங்களை பழுக்க கால்சியம் கார்பைடு ரசாயனத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடு தரும்.
இதனால் புற்றுநோய் பாதிக்கும் அபாயம் உள்ளது. மாம்பழ பிரியர்கள் பழங்களை வாங்கும் போது கவனமாக வாங்க வேண்டும். இயற்கையாக பழுத்த பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. கால்சியம் கார்பைடு பழத்தின் சுவாசத்தால் வெளிப்படும் ஈரப்பதத்துடன் வினைபுரிகிறது.
இந்த பழங்கள் பழுக்க வைக்க உதவும் அசிட்டிலின் என்ற வாயுவை விடுகிறது. இந்த வாய்வு புற்றுநோயை உண்டாக்கக் கூடியது. இது மனித செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றும் திறன் கொண்டது. மாம்பழங்களை பழுக்க வைக்க விற்பனையாளர்கள் பாதுகாப்பான முறைகளை பின்பற்ற வேண்டும்.
கால்சியம் கார்பைடு சருமத்தில் ஒவ்வாமை மற்றும் வெடிப்புகளுக்கு வழி வகுக்கும். சில சமயங்களில் தோல் புற்றுநோயை உண்டாக்கும். சந்தையில் இருந்து வாங்கப்படும் பெரும்பாலான பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவதால் கார்பைடு உள்ளடக்கத்தை குறைக்க ஒரே வழி பழங்களை முறையாக கழுவி பயன்படுத்த வேண்டும்.
கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்கு வந்துள்ள மாம்பழங்களில் கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அதிகளவு உள்ளது. இதனை கண்டறிய வேண்டிய உணவு கலப்படத் தடுப்பு அலுவலர்கள் உரிய முறையில் சோதனையிட்டு செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.