நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே ஊமை உடையான்மடை கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் 22. திருவாடானையிலிருந்து மங்களக்குடிக்கு டூவீலரில் சென்றார். மங்களக்குடி அருகே ரோட்டை மறைத்துக் கொண்டு 15 பேர் நின்றிருந்தனர்.
அவர்களிடம் வழிவிடுமாறு ராகுல் கூறினார். வழிவிட மறுத்து ராகுலை தாக்கினர். இது குறித்து ராகுல் தந்தை நாகேஷ் புகாரில் திருவாடானை போலீசார் மங்களக்குடி சாகுல் ஹமீது 40, கலியுல்லா 60, காஜாமைதீன் 55, உள்ளிட்ட 15 பேரை தேடி வருகின்றனர்.

