ADDED : ஏப் 04, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி அருகே நேற்று முன்தினம் மாலை ராமநாதபுரம் லோக்சபா தொகுதி வேட்பாளர் நவாஸ்கனி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது மஞ்சூர், பொட்டி தட்டி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சி கொடிகள், பந்தல் மற்றும் ஒலிபெருக்கிகள் அமைத்திருந்தனர். இது குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வரதன், சங்கர பாண்டியன் புகாரின் பேரில், போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் மீது வழக்கு பதியப்பட்டது.
*இதே போல் அரியகுடி புத்தூர் கார்த்திக் பாண்டியன் மீது, பறக்கும் படை அலுவலர் கோபால் வழக்கு பதிந்தார்.

