/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.38 லட்சத்திற்கு போலி நிதி அனுமதி ஊராட்சி செயலர், உதவியாளர் மீது வழக்கு

ADDED : ஏப் 30, 2024 08:28 PM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சியில் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் போது கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டும். 2023 -- 24ம் ஆண்டிற்கு 15வது மத்திய நிதிக் குழு மானியத்தில் வரையறுக்கப்பட்ட மானிய ஒதுக்கீடு பணிகளுக்கு கலெக்டரின் அனுமதி பெறாமல் தற்போது ஓய்வு பெற்றுவிட்ட, அப்போதைய மாவட்ட ஊராட்சி செயலர் ரகுவீர கணபதி, 61, பிரிவு உதவியாளர் துர்கா, 47, ஆகியோர் சில பணிகளுக்கு நிதி அனுமதி வழங்கியுள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட சில பணிகளுடன் சேர்த்து கூடுதலாக கலெக்டரின் ஒப்புதல் இன்றி, 29 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக அனுமதி வழங்கினர். மேலும், கமுதி ஒன்றியத்தில் போர்வெல் அமைத்து பைப் லைன் விரிவாக்கம் செய்யும் பணிக்கு, 9 லட்சம் ரூபாய் மதிப்பில் அனுமதி வழங்கியுள்ளனர்.
பணிகளுக்கு, 38 லட்சம் ரூபாய் அனுமதி வழங்கி நிதியையும் விடுவித்ததாக ரகுவீர கணபதி, துர்கா இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, தற்போதைய மாவட்ட ஊராட்சி செயலர் சந்தோசம் எஸ்.பி., சந்தீஷிடம் புகார் அளித்தார். அதன்படி இருவர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.