/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓட்டுக்கு துட்டுதி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு * ரூ.12,500 பறிமுதல்

ADDED : ஏப் 18, 2024 12:51 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் சின்னக்கடைப்பகுதியில் நகராட்சி 31வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஜஹாங்கீர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக தகவல் கிடைத்தது.
தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த மகேஸ்வரன், ராமநாதன், கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரித்தனர். இதில் பணப்பட்டுவாடா செய்தது உறுதி செய்யப்பட்டு ஜஹாங்கீரை போலீசார் வாகனத்தில் ஏற்றியபோது அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம்நடத்தினர். அவரை விடுவித்தனர்.
அவரிடமிருந்து 12 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்து, பறக்கும்படை அலுவலர் ராமநாதன் புகாரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்தனர்.