ADDED : ஜூலை 22, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தனியார் ஹோட்டலில் ‘செடாய்’ தொழில் கூட்டமைப்பு சார்பில் தொழிலதிபர்கள் அறிமுக கூட்டம் ஜூலை 18 ல் நடந்தது.
கடந்த ஆண்டு இதே போல் நடந்த கூட்டம் நடத்தி 30 க்கும் மேற்பட்டோர் தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த கேணிக்கரை போலீசார் அவர்களை வெளியேற்றினர். இதையடுத்து செடாய் கூட்டமைப்பு நிர்வாகி ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் முகமது அன்சர் மகன் சபிக் 30, தங்கச்சாமி மகன் ராஜேஷ் 34, ஆகிய இருவர் மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர்.
