/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு
/
சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு
ADDED : மார் 07, 2025 08:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. தந்தை இறந்து விட்டார். தாய் உடல்நிலை பாதிக்கபட்டிருந்ததால் பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தார்.
அதே பகுதியை சேர்ந்த உறவினரான வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது.
இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இது குறித்து சைல்டு லைன் அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சிறுமி புகாரில் திருவாடானை மகளிர் போலீசார் வசந்தகுமார், காளியம்மாள், பாண்டித்துரை, லட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர்.