/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடையில் விற்பனைக்கு வந்துள்ள முந்திரி பழங்கள்
/
கோடையில் விற்பனைக்கு வந்துள்ள முந்திரி பழங்கள்
ADDED : ஏப் 27, 2024 04:05 AM

கீழக்கரை: கோடை காலத்தில் விளையக்கூடிய முந்திரி பழங்களின் வரத்து தற்போது அதிகரித்துள்ளது.
கீழக்கரை, காஞ்சிரங்குடி, சிக்கல் அருகே காமராஜர்புரம் உள்ளிட்ட பகுதியில் அதிகளவில் முந்திரி மரங்கள் உள்ளன. கோடையில் விளைச்சல் தரும் முந்திரி பழங்கள் தற்போது விற்பனைக்காக வந்துள்ளது.
முந்திரி பழத்தில் உள்ள கொட்டைகள் கிலோ ரூ.400 வீதம் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். முந்திரி பழம் கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிக்கலைச் சேர்ந்த முந்திரி பழம் வியாபாரி முனீஸ்வரி கூறியதாவது:
முந்திரி பழம் பறித்து இரண்டு நாட்கள் வரை வைத்திருக்க வேண்டும்.அதன் பிறகு பழம் கெட்டு விடும். ஆகவே இதன் மகத்துவம் அறிந்தவர்கள்விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இனிப்பு, துவர்ப்பு, நிறைந்த சுவையுள்ள பழமாக முந்திரி பழம் உள்ளது என்றார்.

