/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாலை மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்
/
பாலை மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்
ADDED : மே 25, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடி தடைக்காலத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு காரணமாகஇருக்கும் பாலைமீன்கள் கழிமுகத்துவாரப்பகுதிக்கு வந்து அப்பகுதியில் இனப்பெருக்கம் செய்யும். இவற்றை பெரிய மீன்கள் உண்ணும். இந்த நேரங்களில் மீனவர்கள் மீன் பிடித்தால் அதிகளவு மீன்கள் கிடைக்கும். மீன் பிடி தடைக்காலங்களில் பாலை மீன்களை ஆராய்ச்சிக்காக மட்டுமே பிடிக்க வேண்டும். இதனை காரணமாக வைத்து மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி பகுதியில் பாலை மீன்களை பிடிக்கின்றனர்.
இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. மீன் வளத்துறை அதிகாரிகள் பாலை மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்.

