ADDED : ஜூலை 03, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை ஜூலை 4–-: கீழக்கரை நகராட்சி நகர் பகுதியில் மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த 15 கால்நடைகள் பிடிக்கப்பட்டன. இந்த கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் 48 மணி நேரத்திற்குள் மீட்க வேண்டும். இல்லாவிட்டால் கால்நடை ஒன்றுக்கு ரூ.5000 வீதம் அபராதம் செலுத்தி பெற்று கொள்ள வேண்டும் என கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இடையூறு ஏற்படுத்திய கால்நடைகளை நகராட்சிக்கு முன்புறமுள்ள பாதுகாப்பான இடத்தில் அடைத்து வைத்தனர். இதில் நகராட்சி பொறியாளர் அருள், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, மேற்பார்வையாளர்கள் சக்திவேல், பாலா ஆகியோர் உடனிருந்தனர்.
