/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டில் திரியுது கால்நடைகள் ரோட்டில் திரியுது கால்நடைகள்ஆபத்தில் வாகன ஓட்டிகள்

ADDED : ஜூன் 01, 2024 04:22 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் போக்குவரத்து மிகுந்த ரோடுகளில் கண்டபடி திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
ராமநாதபுரம் நகர், பட்டணம்காத்தான், சக்கரகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உட்புற சாலைகளில் ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் ரோட்டில் திரிகின்றன.
குறிப்பாக வீடுகளில் வளர்க்க வேண்டிய மாடுகளை மேய்ச்சலுக்காக ஊருக்குள் அவிழ்த்து விடுகின்றனர்.
இவை ராமேஸ்வரம்- -மதுரை ரோடு பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் நகர் ரோடுகளில் பகல், இரவு என நேரம் காலமின்றி உலா வருகின்றன. நடுரோட்டில் வரும் போது வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
எனவே ரோட்டில் திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்து ஏலமிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.