ADDED : ஜூன் 10, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை : லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றதை முன்னிட்டு உத்தரகோசமங்கையில் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சக்தி கேந்திர பொறுப்பாளர் நல்லிருக்கை முத்துக்குமார் தலைமையில் ஏராளமான பா.ஜ.,வினர் பங்கேற்று உலக நன்மைக்காக மங்கள நாதர் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.