/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் பூக்குழி விழா நாளை நடக்கிறது இன்று மாலை பூத்தட்டு விழா

ADDED : மே 30, 2024 03:14 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர்கோயில் பூக்குழி விழா நாளையும், இன்று மாலை பூச்சொரிதல் விழாவும் நடப்பதால் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் வைகாசி விழா மே 23ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மூலவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன.
விழாவின் தொடர்ச்சியாக இன்று(மே 30) மாலை 6:30 மணிக்கு சாத்தமங்கலம் கிராமத்தில் இருந்து பக்தர்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக சென்று சுவாமிக்கு பூச்சொரிதல் விழா நடக்கிறது.
அதைத் தொடர்ந்து இரவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து முக்கிய விழாவான பூக்குழி விழா நாளை (மே 31) காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் சாத்தமங்கலம் விநாயகர் கோயிலில் இருந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
விழாவின் தொடர்ச்சியாக ஜூன் 1ல் நடைபெறும் கிடாய் வெட்டுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழாக் குழு தலைவரும் சென்னை மாநகராட்சி கணக்கு மற்றும் நிதிக் குழு தலைவரான தனசேகரன், கோயில் டிரஸ்டி கருப்பத்தேவர் செய்து வருகின்றனர்.