ADDED : மார் 14, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: வெளி மாவட்டங்களில் இருந்து ஆர்.எஸ். மங்கலம் பகுதிக்கு விற்பனைக்கு வந்துள்ள கலர் கோழி குஞ்சுகளை சிறுவர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்குகின்றனர். ஒரு கோழிக் குஞ்சு ரூ.20 க்கும், ஆறு கோழிக்குஞ்சுகள் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டன.
கடந்த சில நாட்களாக தேசிய நெடுஞ்சாலை பகுதி, பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள டி.டி. மெயின் ரோடு, பரமக்குடி ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்கின்றனர்.