/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்களுடன் முதல்வர் திட்டம் 15 துறை அதிகாரிகள் பங்கேற்பு
/
மக்களுடன் முதல்வர் திட்டம் 15 துறை அதிகாரிகள் பங்கேற்பு
மக்களுடன் முதல்வர் திட்டம் 15 துறை அதிகாரிகள் பங்கேற்பு
மக்களுடன் முதல்வர் திட்டம் 15 துறை அதிகாரிகள் பங்கேற்பு
ADDED : ஜூலை 18, 2024 05:25 AM

பரமக்குடி : -பரமக்குடி அருகே முத்துசெல்லாபுரம் கிராமத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 15 துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் அரியகுடி ஊராட்சி முத்துசெல்லாபுரம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் முகாமை பார்வையிட்டார்.
இதில் மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வீட்டு வசதி, போலீஸ், மாற்றுத்திறனாளிகள், சமூக நலன், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், உழவர் நலம், தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு என 15 துறைகள் சார்பில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
கிராம மக்கள் தங்களது தேவைகளை ஒவ்வொரு துறை அதிகாரியிடம் மனுக்களாக அளித்தனர். தாசில்தார் சாந்தி, போகலுார் பி.டி.ஓ., க்கள் சிவசாமி, மணிவண்ணன், ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்யா, துணைத் தலைவர் பூமிநாதன், அரியகுடி ஊராட்சி தலைவர் காயத்ரி, வக்கீல் குணசேகரன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.