/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 16, 2024 03:53 AM
கமுதி: கமுதி அருகே நத்தம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். ஆய்வுக்குழு துணை அலுவலர் தமிழரசி, தாசில்தார் காதர் முகைதீன், பி.டி.ஓ., சந்திரமோகன் முன்னிலை வகித்தனர். நத்தம் ஊராட்சி தலைவர் போத்தி வரவேற்றார். நத்தம்,அச்சங்குளம், உடையநாதபுரம்,வங்காருபுரம், சடையனேந்தல் ஊராட்சி மக்கள் பங்கேற்றனர்.
மகளிர் உரிமைத்தொகை, பட்டா திருத்தம் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன் ஊராட்சித் தலைவர்கள் அச்சங்குளம் புஷ்பலதா, உடையநாதபுரம் கதிர், வருங்காபுரம் செல்வராணி, சடையனேந்தல் மல்லிகா உட்பட தாலுகா அலுவலகப் பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
---

