/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்2 துறை அலுவலர்கள் ஆப்சென்ட்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்2 துறை அலுவலர்கள் ஆப்சென்ட்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்2 துறை அலுவலர்கள் ஆப்சென்ட்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்2 துறை அலுவலர்கள் ஆப்சென்ட்
ADDED : ஆக 01, 2024 04:17 AM
திருவாடானை: திருவாடானை அருகே அஞ்சுகோட்டை ஊராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் குடிநீர் வடிகால்வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கலந்து கொள்ளாததால் மக்கள் குறைகளை கூற முடியாமல் தவித்தனர்.
அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர மக்களுடன் முதல்வர் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருவாடானை ஒன்றியத்தில் நேற்று அஞ்சுகோட்டை ஊராட்சி கருப்பர் கோயிலில் முகாம் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ துவக்கி வைத்தார்.
தாசில்தார் அமர்நாத், பி.டி.ஓ. கணேசன், ஆரோக்கிய மேரிசாராள்(ஊராட்சி) உட்பட பலர் பங்கேற்றனர். ஓரிக்கோட்டை, குஞ்சங்குளம், அஞ்சுகோட்டை, அரும்பூர், குளத்துார், அச்சங்குடி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி குறைகளை மனுக்கள் மூலம் தெரியபடுத்துவதற்காக வந்திருந்தனர்.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்வாரியம், சுகாதாரம், வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் குடிநீர் வடிகால்வாரியம், காவிரி குடிநீர் திட்ட அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறையினர் கலந்து கொள்ளவில்லை. இதனால் குடிநீர், ரோடு வசதி கேட்டு வந்த பொதுமக்கள் மனுக்களை கொடுக்க முடியாமல் தவித்தனர்.
அஞ்சுகோட்டை ஊராட்சி தலைவர் பூபாலன் கூறுகையில், ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஓரியூர் விலக்கு ரோட்டில் பல நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து வீணாகிறது. அதே போல் கிராம ரோடுகள் மிக மோசமாக உள்ளது.
பொதுமக்களுக்கு மிக முக்கியமான இத்துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் பல ஊராட்சிகளில் மக்கள் மனுக்களை கொடுக்க முடியவில்லை என்றார். ஆக. 9ல் பெரியகீரமங்கலம், 12ல் நம்புதாளை, 20ல் கொடிப்பங்கு, 29ல் பாண்டுகுடி, செப்.12ல் கடம்பூர் ஊராட்சிகளிலும் முகாம் நடக்கிறது.