/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நான்கு இடங்களில் முதல்வர் மருந்தகம்
/
நான்கு இடங்களில் முதல்வர் மருந்தகம்
ADDED : பிப் 26, 2025 07:08 AM
திருவாடானை: நான்கு இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை மூலம் இவை கண்காணிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். திருவாடானை தாலுகாவில் கோனேரிகோட்டை கூட்டுறவு சங்கம் சார்பில் திருவாடானையிலும், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் வளமானுார் கூட்டுறவு சங்கம் சார்பில் திருப்பாலைக்குடியிலும், தனியார் தொழில் முனைவோர் சார்பில் ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்துார் ஆகிய நான்கு இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் திறந்து வைத்தார்.
இது குறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கூறுகையில்,  தரமான மருந்துகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குவது இந்த மருந்தகத்தின் நோக்கம். பொதுமக்கள் முதல்வர் மருந்தகத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விற்பனை மற்றும் திட்டப்பணிகள் குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்வார்கள் என்றனர்.
*திருப்பாலைகுடியில்  தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன், முன்னாள் யூனியன் தலைவர் ராதிகா, காங்., தெற்கு வட்டார தலைவர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

