/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் வளர்ச்சிப் பணிகள் அரசு தலைமைச் செயலாளர் ஆய்வு
/
ராமேஸ்வரத்தில் வளர்ச்சிப் பணிகள் அரசு தலைமைச் செயலாளர் ஆய்வு
ராமேஸ்வரத்தில் வளர்ச்சிப் பணிகள் அரசு தலைமைச் செயலாளர் ஆய்வு
ராமேஸ்வரத்தில் வளர்ச்சிப் பணிகள் அரசு தலைமைச் செயலாளர் ஆய்வு
ADDED : ஆக 12, 2024 04:19 AM

ராமநாதபுரம் : ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில், அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ராமேஸ்வரம் மற்றும் அரிச்சல்முனை, தனுஷ்கோடி, குந்துக்கால் ஆகிய இடங்களை பார்வையிட்டார். அவ்விடங்களில் நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மண்டபம் அருகே சுந்தரமுடையானில் தோட்டக்கலைத்துறையின் மரக்கன்றுகள் வளர்ப்பு பண்ணை, காரிக்கூட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார். சுற்றுலா வரும் மக்களின் வசதிக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் எஸ்.பி., சந்தீஷ், வன உயிரின காப்பாளர் பகான் ஜெக்தீஷ் சுதாகர், கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப்சிங், பரமக்குடி சப்கலெக்டர் அபிலாஷா கவுர், உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது இர்பான், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்பார்வை பொறியாளர் முரளி மனோகர், அதிகாரிகள் பங்கேற்றனர்.