ADDED : ஆக 14, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி:-ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முதலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன் மனைவி சாவித்திரி. இவர் நேற்று மாலை 6:00 மணிக்கு தனது 3 வயது பெண் குழந்தை இதலிகாவுடன், அப்பகுதியில் உள்ள ஆலமரத்தடி ஊருணியில் குளிக்க சென்றார்.
அங்கு குளித்த நிலையில் திடீரென குழந்தையை காணாமல் தேடினார். அப்போது தான் குழந்தை ஊருணியில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.