/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குழு கூட்டம்
/
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குழு கூட்டம்
ADDED : மார் 15, 2025 05:12 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குழந்தைகள் நலன் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து கூறியதாவது:
குழந்தை திருமணம், தொழிலாளர், போக்சோ சட்டங்கள் குறித்து மக்கள், பள்ளி குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா காலத்தில் பெற்றோர், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிலை குறித்து கண்காணிக்க வேண்டும் என்றார்.
குழந்தை பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்களை கலெக்டர் வெளியிட்டார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், குழந்தை நலக்குழு தலைவர் காயத்ரி, வேல்டு விஷன் இந்தியா திட்ட இயக்குநர் ஜெயலெட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் விசுபாவதி பங்கேற்றனர்.