/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வறட்சியால் ஒரு மாதத்திற்கு முன்பே முடிவுக்கு வந்த மிளகாய் சாகுபடி
/
வறட்சியால் ஒரு மாதத்திற்கு முன்பே முடிவுக்கு வந்த மிளகாய் சாகுபடி
வறட்சியால் ஒரு மாதத்திற்கு முன்பே முடிவுக்கு வந்த மிளகாய் சாகுபடி
வறட்சியால் ஒரு மாதத்திற்கு முன்பே முடிவுக்கு வந்த மிளகாய் சாகுபடி
ADDED : ஏப் 19, 2024 05:05 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் வறட்சி காரணமாக போதிய தண்ணீர் இன்றி மிளகாய் செடிகள் காய்ந்துஉள்ளன. இந்தாண்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மகசூல் முடிந்துவிட்டதால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான செங்குடி, சீனாங்குடி, சேத்திடல், எட்டியதிடல், முத்துப்பட்டினம், வல்லமடை, புல்லமடை, ராமநாதமடை, சவேரியார் பட்டினம் உட்பட சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய் செடிகள் பிப்., கடைசி வாரத்தில் மகசூல் நிலையை அடைந்தன.
விவசாயிகள் செடிகளில் இருந்து பறித்த மிளகாய் பழங்களை வெயிலில்உலர்த்தி, வத்தலாக்கி விற்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடரும்வறட்சியின் காரணமாக மிளகாய்ச் செடிகள் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல், கருகி விட்டன. இன்னும் ஒரு மாத காலம் மகசூல் கொடுக்க வேண்டிய நிலையில், முன்கூட்டியே வறட்சியால் செடிகள் கருகியதால் மிளகாய் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.