/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வறட்சியால் கருகும் மிளகாய் செடிகள்
/
வறட்சியால் கருகும் மிளகாய் செடிகள்
ADDED : பிப் 25, 2025 07:03 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகள் வறட்சிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கருகுவதால் மிளகாய் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான புல்லமடை, வல்லமடை, சவேரியார் பட்டினம், செங்குடி, சீனாங்குடி, சேத்திடல், முத்துப்பட்டினம், பூலாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளனர்.
சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய் செடிகள் தற்போது மகசூல் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடைபெறும் கடும் வறட்சியால் பெரும்பாலான வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய் செடிகள் வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வெயில் நேரங்களில் கருகி வருகின்றன.
சில பகுதிகளில் கண்மாய்கள் மற்றும் குளங்களில் தேங்கியுள்ள தண்ணீரை விவசாயிகள் மிளகாய் செடிகளுக்கு பாய்ச்சி மிளகாய் செடிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தண்ணீர் வசதி இல்லாத பெரும்பாலான பகுதிகளில், வறட்சிக்கு தாக்கு பிடிக்க முடியாமல், மிளகாய் செடிகள் கருகுவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.