ADDED : மே 07, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் வழுதுார் அருளொளிவிநாயகர் கோயிலில் புனித நீர் வைத்து பூஜைகள் நடந்தது.
கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் புனித நீர் எடுத்து விநாயகருக்கு அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை பருகினால் பக்தர்கள் நினைத்தது நடக்கும் என்ற ஐதீகம் உள்ளது. இதன்படி நேற்று கிணற்றில் புனிதநீர் எடுத்து விநாயகருக்கு அபிேஷகம் செய்து தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு புனித நீர் வழங்கப்பட்டது. வழுதுார் கிராம மக்கள், அருளொளி மன்றத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.

