/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடியில் பெண் பயணிகளுக்கான நிழற்குடையில் குடிமகன்கள் தொல்லை
/
ஏர்வாடியில் பெண் பயணிகளுக்கான நிழற்குடையில் குடிமகன்கள் தொல்லை
ஏர்வாடியில் பெண் பயணிகளுக்கான நிழற்குடையில் குடிமகன்கள் தொல்லை
ஏர்வாடியில் பெண் பயணிகளுக்கான நிழற்குடையில் குடிமகன்கள் தொல்லை
ADDED : மே 06, 2024 12:37 AM
ஏர்வாடி : -ஏர்வாடியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களுக்கான பயணியர் நிழற்குடையில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சாயல்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், துாத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான பகுதியாக கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது.
ஏர்வாடி தர்கா செல்லும் வழியில் மும்முனை சந்திப்பில் தொலைதுார பஸ்கள் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன.
இந்நிலையில் மும்முனை சந்திப்பில் உள்ள பெண்கள் பயணியர் நிழற்குடையில் நேற்று காலை 11:00 மணிக்கு குடிமகன்கள் அங்கே அமர்ந்து மது அருந்தும் இடமாக மாற்றினர்.
அங்கேயே படுத்து உறங்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் பெண்கள் அச்சப்பட்டு வெயிலிலும் மரத்தடி நிழலிலும் காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர்.
எனவே ஏர்வாடி போலீசார் பயணிகளுக்கு தொல்லை தரும் குடிமகன்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.