ADDED : ஆக 29, 2024 11:26 PM

ராமேஸ்வரம் : காணாமல் போகும் மீனவரை தேடிச் செல்லும் செலவை வழங்க முடியாத மீன்துறையை கண்டித்து ராமேஸ்வரத்தில் சி.ஐ.டி.யு., வினர் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.
இயற்கை சீற்றத்தில் படகு கடலில் மூழ்கி காணாமல் போகும் மீனவர்களை தேடிச் செல்ல ராமேஸ்வரம் மீன்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மீனவர்களின உறவினர்களே மாற்று படகு ஏற்பாடு செய்து அதற்கான எரிபொருளுக்கு செலவிடும் அவலம் உள்ளது.
ஆக.26ல் கடலில் மூழ்கிய மீனவர் வெள்ளைச்சாமியை தேடிச் செல்ல எரிபொருள் செலவுக்கு மீன்துறை வழங்க முடியாமல் முடங்கி கிடப்பதை கண்டித்து நேற்று மீன்துறை டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு., கடல் தொழிலாளர் சங்கத்தினர் பிச்சை எடுக்க போராட்டம் நடத்தினர். இதில் சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் கருணாமூர்த்தி, செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.

