/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆனந்துாரில் இருபிரிவினர் இடையே மோதல்: கார் கண்ணாடி உடைப்பு
/
ஆனந்துாரில் இருபிரிவினர் இடையே மோதல்: கார் கண்ணாடி உடைப்பு
ஆனந்துாரில் இருபிரிவினர் இடையே மோதல்: கார் கண்ணாடி உடைப்பு
ஆனந்துாரில் இருபிரிவினர் இடையே மோதல்: கார் கண்ணாடி உடைப்பு
ADDED : மே 27, 2024 05:46 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துாரில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதலால் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
ஆனந்துார் ஊராட்சி செயலாளர் செய்யது அப்தாகிர் 24, குழாய் பதிக்கும் பணி மேற்கண்ட போது, அவரை சிலர் தாக்கினார். இது குறித்த புகாரில் பச்சனத்திக்கோட்டையைச் சேர்ந்த இளங்கோ, கவுதம், நீதி ஆகியோர் மீது, ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், அனைவரும் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றனர். நீதி தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் நடந்த உறவினர் விசேஷத்திற்கு நேற்று மதியம் காரில் சென்றுள்ளார். அப்போது வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து உள்ளிருந்த பெண்கள் உள்ளிட்டவர்களை சிலர் தாக்கினர். இப்பிரச்சினையால் இரு பிரிவினரும், தங்களது ஆதரவாளர்களுடன் கூடியதால், மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கார் கண்ணாடி சேதம், பெண்களை தாக்கியதாக 8 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

