/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துாய்மை இந்தியா திட்டம் 14 ஊராட்சிகள் தேர்வு
/
துாய்மை இந்தியா திட்டம் 14 ஊராட்சிகள் தேர்வு
ADDED : மே 30, 2024 03:15 AM
திருவாடானை: துாய்மை இந்தியா திட்டத்தில் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் மாதிரி ஊராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
துாய்மை இந்தியா திட்டத்தில் கிராமங்களில் சுகாதாரத்தை சீராக பராமரிக்கவும், உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை, தனிநபர் இல்ல கழிப்பறை திட்டம், திடக்கழிவு மேலாண்மையில் குப்பையிலிருந்து உரம் தயாரித்தல் என பல்வேறு திட்டபணிகள் நடைமுறையில் உள்ளன.
துாய்மை இந்தியா திட்டத்தில் ஊராட்சிகளில் பொது சுகாதாரம், அரசு கட்டமைப்பு வசதிகள், தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படையில் மாதிரி ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் முதல் கட்டமாக 14 ஊராட்சிகள் மாதிரி ஊராட்சிகளாக தேர்வு செய்யபட்டுள்ளது.
இதுகுறித்து வட்டாரவளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சந்திரமோகன்கூறுகையில், திருவாடானை யூனியனில் முதல் கட்டமாக 14 ஊராட்சிகள் மாதிரி ஊராட்சியாக தேர்வாகியுள்ளன.
இதே போல் மீதமுள்ள அனைத்து ஊராட்சிகளும் விரைவில் தேர்வு செய்யப்பட்டு தன்னிறைவு பெறுவது தான் துாய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் என்றார்.