ADDED : மே 24, 2024 02:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.
தென்னை மரத்தில் ஏறி தொல்லை தரக்கூடிய மர எலி, அணில் ஆகியவைகளிடமிருந்து தென்னை குரும்பைகள் மற்றும் காய்களை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர்.
தென்னை விவசாயி பீர்முகமது கூறியதாவது: தென்னை மரத்தில் பத்தடி உயரத்திற்கு மேல் இரண்டு அடி உயரத்தில் மரத்தை சுற்றிலும் இரும்பு தகடு வைத்து பொருத்தப்படுகிறது.
இதனால் தென்னை மரத்தில் ஏறி காய் உள்ளிட்ட குரும்பை பறிப்பதற்கு அவற்றின் தொல்லைகள் இல்லாமல் தென்னை மரங்களில் காய்கள் பாதுகாக்கப்படுகிறது என்றார்.