/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேங்காய் விலை தொடர்ந்து சரிவுதென்னை விவசாயிகள் வேதனை
/
தேங்காய் விலை தொடர்ந்து சரிவுதென்னை விவசாயிகள் வேதனை
தேங்காய் விலை தொடர்ந்து சரிவுதென்னை விவசாயிகள் வேதனை
தேங்காய் விலை தொடர்ந்து சரிவுதென்னை விவசாயிகள் வேதனை
ADDED : மே 11, 2024 02:31 AM
ராமநாதபுரம்:தமிழகத்தில் தொடர்ந்து தேங்காய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
தமிழகத்தில் தேங்காய் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளை ஈ தென்னம் பாளையில் அமர்ந்து சாறுகளை உறிஞ்சி விடுவதால் 20 காய்கள் காய்க்கும் குலையில் 4 காய்கள் மட்டுமே காய்க்கின்றன.
இதன் காரணமாக இந்த விவசாயிகள் இந்த ஆண்டு பெரும் நஷ்டத்தைசந்தித்துள்ளனர். தேங்காய் ரூ.7 முதல் ரூ.8 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். விலை சரிவு காரணமாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
அரசால் கொப்பரை கிலோ ரூ.111.60க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. காங்கேயம் பகுதியில் வியாபாரிகள் கொப்பரை கிலோவுக்கு ரூ. 92 முதல் ரூ. 96 வரை கொள்முதல் செய்கின்றனர்.
தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிமாதவன் கூறியதாவது: வெள்ளை ஈயால் உற்பத்தி 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. விலையும் கிடைக்கவில்லை. ஒரு காய் ரூ.7 முதல் 8 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. தேங்காய் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துவருகிறோம்.
அரசு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் வழங்கினால் ஓரளவுக்கு விலை கிடைக்கும். தேங்காய் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். குறைந்த பட்சம் ஒரு காய் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையானால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்றார்.----