/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேங்காயை மதிப்பு கூட்டு பொருளாக்கி உரிய விலை கிடைக்க செய்ய வேண்டும்
/
தேங்காயை மதிப்பு கூட்டு பொருளாக்கி உரிய விலை கிடைக்க செய்ய வேண்டும்
தேங்காயை மதிப்பு கூட்டு பொருளாக்கி உரிய விலை கிடைக்க செய்ய வேண்டும்
தேங்காயை மதிப்பு கூட்டு பொருளாக்கி உரிய விலை கிடைக்க செய்ய வேண்டும்
ADDED : மே 07, 2024 11:22 PM
ராமநாதபுரம் : தேங்காயை மதிப்பு கூட்டிய பொருளாக்கி உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்புல்லாணியில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அப்துல் முனாப் தலைமை வகித்தார்.
ஊராட்சித் தலைவர்கள் ரெகுநாதபுரம் பழனி என்ற கோபாலகிருஷ்ணன், வண்ணாங்குண்டு தியாகராஜன், காரான் சக்திவேல், ரெகுநாதபுரம் ஊராட்சி துணைத்தலைவர் ஜெகத்ரட்சகன் பங்கேற்றனர்.
தென்னை விவசாயிகள் சங்க துணைத்தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். நிர்வாகிகள் கவுரவ ஆலோசகர் செல்லத்துரை அப்துல்லா, துணைத்தலைவர் கதிரேசன், பொருளாளர் மோகன், துணை செயலாளர் தங்கசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேங்காயை மதிப்பு கூட்டிய பொருளாக்கி விவசாயிகளை நஷ்டத்திலிருந்து மீட்க வேண்டும். தேங்காயை கொப்பரை ஆக்கி கலெக்டர் மற்றும் அரசுத்துறை உதவியுடன் உரிய விலை கிடைக்க செய்ய வேண்டும். தென்னை வணிக வளாகம் அமைக்க கலெக்டர் வழங்கிய 5 ஏக்கர் நிலம் 2 கோடி நிதி ஒதுக்கீட்டை முறையாக பயன்படுத்த தென்னை விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வட்டார வாரியாக ஆலோசனை குழுக்கள் அமைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

