/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவர் நினைவிடத்தில் கோவை புதிய ஆதினம்
/
தேவர் நினைவிடத்தில் கோவை புதிய ஆதினம்
ADDED : ஏப் 12, 2024 10:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் கோவை காமாட்சிபுரி புதிய ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமி மரியாதை செய்தார்.
கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரர் சுவாமி கடந்த மாதம் சித்தியடைந்தார். அதன் பின் மடத்தின் 51வது ஆதினமாக சாக்த பஞ்சலிங்கேஸ்வர சுவாமி பொறுப்பேற்றார்.
கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் தேவர் உள்ள சிலைக்கு புதிய ஆதினம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். நினைவிட பொறுப்பாளர்கள் காந்திமீனாள், பழனி, தங்கவேல் வரவேற்றனர். உடன் சிவனடியார்கள், குருகுல சிவ தொண்டர்கள் இருந்தனர்.

