
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்,: காவனக்கோட்டை, சனவேலி பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார்.
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்கும் பணி நடக்கும் பகுதிகளை பார்வையிட்டார்.
தற்போது கடும் வறட்சி நிலவுவதால் காவிரி கூட்டு குடிநீர் மற்றும் உள்ளூர் கூட்டு குடிநீர் திட்டங்கள்முறையாக செயல்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

