/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓட்டுபதிவு மையங்களில் அடிப்படைவசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
/
ஓட்டுபதிவு மையங்களில் அடிப்படைவசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
ஓட்டுபதிவு மையங்களில் அடிப்படைவசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
ஓட்டுபதிவு மையங்களில் அடிப்படைவசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 25, 2024 05:39 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரம், அறங்தாங்கி சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் விஷ்ணுசந்திரன் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் லோக்சபா தேர்தல் ஏப்.19ல் நடக்கிறது. இதையடுத்து கலெக்டர் விஷ்ணுசந்தரன் தேவிப்பட்டினம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றியம், புனித ஜோசப் மெட்ரில் மேல்நிலைப்பள்ளி, கோபாலபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் ஓட்டுப்பதிவு மையங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஏப்.19ல் தேர்தல் நாளன்று வரும் வாக்காளர்கள் சிரமம் இன்றி ஓட்டளிக்கும் வகையில் உரிய வசதிகளை செய்து தரவேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.