/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பார்த்திபனுார் - அரிச்சல்முனை வரையிலும் மின்விளக்குகள் அமைக்க கலெக்டர் உத்தரவு
/
பார்த்திபனுார் - அரிச்சல்முனை வரையிலும் மின்விளக்குகள் அமைக்க கலெக்டர் உத்தரவு
பார்த்திபனுார் - அரிச்சல்முனை வரையிலும் மின்விளக்குகள் அமைக்க கலெக்டர் உத்தரவு
பார்த்திபனுார் - அரிச்சல்முனை வரையிலும் மின்விளக்குகள் அமைக்க கலெக்டர் உத்தரவு
ADDED : ஏப் 30, 2024 10:44 PM
ராமநாதபுரம், - மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இரவு நேர விபத்தை தவிர்க்க பார்த்திபனுாரில் இருந்து அரிச்சல்முனை வரை தேசிய நெடுஞ்சாலையில் தேவையுள்ள இடங்களில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் சாலைப்பாதுகாப்புக் குழு கூட்டம் நடந்தது.கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார்.வட்டார போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, போலீசார் ஆகிய துறைகள் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்து நடைபெறும் பணிகளை கேட்டறிந்தார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:
மாவட்ட சுற்றுலா தளங்களில் தினமும் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும்படி விபத்துப் பகுதிகளை கண்டறிந்து விழிப்புணர்வு குறித்த விளம்பர பலகைகள் வைக்க வேண்டும். பார்த்திபனுாரில் இருந்து அரிச்சல்முனை வரை தேசிய நெடுஞ்சாலையில் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து சாலையின் இருபுறத்திலும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.
ராமேஸ்வரத்தில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்துவோர் மீது போலீசார், வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முறையான ஆவணங்களின்றி இயங்கும் வாகனத்தின் டிரைவர், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், உதவி எஸ்.பி., சிவராமன், ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உமாதேவி, வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர் பங்கேற்றனர்.