/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
/
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 22, 2024 02:31 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ் ஆய்வு செய்தனர்.
கோல்கட்டாவில் முதுநிலை பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளிலும் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், சந்தீஷ் எஸ்.பி., ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
அவசர சிகிச்சை பிரிவு, நோயாளிகள், டாக்டர்கள் தங்கும் அறை, நர்ஸ்களின் ஓய்வறையை பார்வையிட்டனர்.
வெளி நோயாளிகள் பிரிவுக்கு சென்றனர். அங்கு வரும் நோயாளிகள் குறித்தும் அவர்களுக்கு செய்யப்படும் பரிசோதனை குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர். மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள், கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டனர்.
பின் டீன் சுபிதா அறையில் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், பொதுமக்கள் வருவதை எப்படி கண்காணிக்கப்படுகிறது. எத்தனை நுழைவு வாயில்கள் உள்ளன.
இதில் யார் வருகிறார்கள் என்பது கண்காணிக்கப்படுகிறதா என்ற கேள்விகளை எழுப்பி பதில் பெற்றனர். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியதாவது:
அரசு உத்தரவின்படி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நானும், எஸ்.பி.,யும் ஆய்வு செய்தோம்.
மருத்துவமனையில் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் உள்ள பணியாளர்கள் கண்காணிக்கின்றனர்.
கண் அறுவை சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் இல்லை என்று தெரிய வந்தது. தற்போது கண் டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு டாக்டர்கள் காயங்களுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். சிறப்பு டாக்டர்கள் இல்லாத நிலையில் மதுரைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறது.
மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
டீன் சுபிதா, மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் ஞானக்குமார், நிலைய மருத்துவ அலுவலர் மனோஜ்குமார்,அரசு டாக்டர்கள் சங்கத்தலைவர் மலையரசு மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.