/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
/
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ADDED : ஆக 20, 2024 07:15 AM

ராமநாதபுரம் : குடிநீர் வழங்க கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் முனீஸ்வரம், மருதன்தோப்பு, மீனாட்சிபுரம் மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கீழக்கரை தாலுகா அலுவலகம் எதிரேயுள்ள திருப்புல்லாணி ஊராட்சிக்கு உட்பட்ட முனீஸ்வரம், மருதன்தோப்பு, மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அனைவரும் கூலி வேலை செய்கின்றனர்.
இங்கு குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஒரு குடும்பத்திற்கு தினமும் 5 குடம் தேவைப்படும் நிலையில் குடம் ரூ.15க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்துவதால் தவிக்கிறோம். எங்கள் கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் செல்லும் பகிர்மான குழாயில் இருந்து குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.
கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததால் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.