/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அக்.,1 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்கம்
/
அக்.,1 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்கம்
அக்.,1 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்கம்
அக்.,1 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்கம்
ADDED : ஜூலை 25, 2024 09:47 PM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்திற்கு அக்.1 முதல் ரயில் போக்குவரத்து துவக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் வெளியிட்ட அறிவிப்பு:
பாம்பன் ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிந்து, செப்., கடைசி வாரத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் ஆய்வு செய்ய உள்ளது. அதன் பின் அக்., 1ல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்கப்படும்.
எனவே, ராமேஸ்வரத்தில் தகவல் தொடர்பு சாதனங்கள், பிளாட்பாரம், பிட்லைன் மற்றும் பயணிகள் வந்து செல்லும் வசதியை தயார் நிலையில் வைக்கவும், டிச., 31 க்குள் ராமேஸ்வரத்தில் மின்சார ரயில் வருவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.