/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெளிநாட்டிற்கு கல்விச் சுற்றுலா சென்ற மாணவிகளுக்கு பாராட்டு
/
வெளிநாட்டிற்கு கல்விச் சுற்றுலா சென்ற மாணவிகளுக்கு பாராட்டு
வெளிநாட்டிற்கு கல்விச் சுற்றுலா சென்ற மாணவிகளுக்கு பாராட்டு
வெளிநாட்டிற்கு கல்விச் சுற்றுலா சென்ற மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : மார் 07, 2025 08:15 AM

ராமநாதபுரம் : பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளிநாடு கல்விச்சுற்றுலா சென்று வந்துள்ள போகலுாார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் சுவாசிகா, கதிர்மதியை பலர் பாராட்டினர்.
2023- 24 கல்வியாண்டில் வானவில் மன்றம் நடத்திய மாநில அளவிலான வினாடி -வினா போட்டியில் வெற்றி பெற்ற முத்துவயல் போகலுாார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் 8ம் வகுப்பு கதிர்மதி, 6ம் வகுப்பு சுவாசிகா ஆகியோர் வெளிநாடு கல்வி சுற்றுலா சென்றுவர தேர்வாகினர்.
மாணவிகள் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பிப். 23 முதல் 28 வரை கல்விச் சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
மாணவிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் காந்தி, அறிவியல் இயக்கத்தின் போகலுார் வட்டாரச் செயலாளர் குமரேசன், தலைவர் மலைச்சாமி, முத்துவயல் நடுநிலைப் பள்ளி தலைமை யாசிரியர் முனீஸ்வரி, ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.