ADDED : ஆக 10, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கடலாடி தாலுகா பனிவாசல் ஊராட்சி மறவாய்க்குடி கிராம மக்கள் மனு அளித்தனர்.
அதில், ஊரில் 2500 வசிக்கிறோம். பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. காவிரி கூட்டுக்குடிநீர் சரியாக வருவதில்லை. எனவே சமுதாய கிணறு அமைத்துத்தர கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
